உலகின் நம்பர் ஒன் பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர்
பில் கேட்ஸ்
கடந்த 1994 ஆம் ஆண்டு
மெலிண்டா
என்ற பெண்ணை மணந்தார், இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
காதல் மனைவியை பிரிந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில், மீண்டும் அவருடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார் பில்கேட்ஸ். ’27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு மெலிண்டாவை விட்டு பிரிந்தேன். இந்த விஷயத்தில் நான் செய்ததை தவறு என கருதுகிறேன்.
மெலிண்டாவை விட்டு பிரிந்தபிறகு நான் வேறொரு திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் மீது நான் இன்னும் பாசத்துடனே இருக்கிறேன். மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறேன்.
மெலிண்டாவிடம் இருந்து நான் முழுமையாக விலகி செல்லவில்லை. அவருடன் நட்புடனே இருக்கிறேன். மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி’ என்று அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டிக்கு பில்கேட்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பில்கேட்சின் விருப்பத்துக்கு மெலிண்டா தரப்பில் இருந்து இதுவரை க்ரீன் சிக்னல் தெரிவிக்கப்படவில்லை.