மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்திற்காக பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கிறார்

மலையாளத்தில் வெளியான லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ‘காட்பாதர்’.

சிரஞ்சீவி, நயன்தாரா, சத்யதேவ் கஞ்சரன, ஹரிஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

‘ஜெயம்’ மோகன் இயக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் உடன் இணைந்து ராம் சரண் தேஜா தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் 20 நிமிட காட்சியில் மட்டுமே வரும் கௌரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார், இதற்காக அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்காக ஒரு பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.