பிரதமர் மோடியை அண்ணல் அம்பேதக்ருடன் ஒப்பிட்ட ஒரு புத்தகத்திற்கு, இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். முன்னுரையில், மோடி தலைமையிலான மத்திய அரசின் பல திட்டங்கள் அம்பேத்கரது சிந்தனையை அடிப்படையாக கொண்டவை, முத்தலாக் தடை சட்டம் போன்றவற்றால் அம்பேத்கர் பெருமிதப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த புக்கத்தின் முன்னுரை சர்ச்சையான போதும் பிரதமர் மோடி குறித்த கருத்துகளை திரும்பப் பெற முடியாது என இளையராஜா திட்டவட்டமாக கூறினார்.
இதற்கிடையே, தனியார் செய்தி நிறுவனமான i தமிழ் நியூஸூக்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் இளையராஜா சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பபட்டது. அப்போது, அந்த 3 பக்க முன்னுரையை நீங்கள் தான் எழுதியதாக தகவல் பரவிவருவதாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், இளையராஜாவுக்கு பதில் நான் முன்னுரை எழுதி கொடுத்தேன் என்பவர்கள், இளையராஜா இசையமத்தை 1400 படங்களுக்கு, நான் இசை அமைத்தேன் என்பார்களா? அப்படி சொல்வார்களா? இளையராஜா அப்படி எழுதி இருக்கிறார். 15,16 புத்தகம் எழுதின அறிவாளிக்கு நான் முன்னுரை எழுதி கொடுத்தேன்னு எவன் சொன்னான்? என்னய்யா பெரிய சமூகம் சமூகம்?
அண்ணாதுரைக்கு நா கதை எழுதிக்கொடுத்து அவர் வெளியீடுகிறார் என கூறினால் அவருக்கு அசிங்கம் இல்ல. கலைஞர் எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறார், கண்ணதாசன் எத்தனை பாட்டு எழுதியிருக்கிறார். எல்லாதையும் கங்கை அமரன் எழுதிக்கொடுத்தாருனு சொன்ன அசிங்கம் இல்லை. யார் யார் பெயரில் வருவதோ, அவங்களிடம் தான் கேள்வி கேட்கனும், குற்றவாளி போல் என்னை நேரடியாக கேட்கக்கூடாது என கோபப்பட்டார்.
நான் தான் எழுதினேன்
தொகுப்பாளரிடம் கோபமாக பேசிய கங்கை அமரன், திடீரென யோவ்… பொறுய்யா… பொறுய்யா.. ஆமா நான் தான் எழுதினேன். நீ என்ன பண்ணுவ? அப்படி பேசுறவன் எல்லாம் பேசுறவன் முட்டாள், அறிவே இலாத நாய் என்றார்.
தொடர்ந்து, மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது என் இஷ்டம்.. எனக்கு பிடிக்கும். எனக்கு பால்கோவா சாப்பிட கூட தான் பிடிக்கும். அது எப்படி பிடிக்காலானு நீ கேள்வி எழுப்ப முடியுமா? என்றார்.
ஏய்.. பொறுய்யா.. வாயை மூடு..
இதையடுத்து, தொகுப்பாளர் அம்பேத்கர் கொள்கை என்று தான் ஆரம்பித்தார். அதற்குள் சீறிய கங்கை அமரன், அம்பேத்கர் கோட்பாடு பற்றி உனக்கு தெரியுமா? அம்பேத்கர் என்ன சொன்னார்னு தெரியுமா? ஏய்.. பொறுய்யா.. வாயை மூடு..ஏய்
அம்பேத்கர் என்ன சொன்னார்னு தெரியுமா? முதல இளையராஜா எழுதின முன்னுரையை படிச்சியா நீ? அம்பேத்கரை திருமாவளவுடன் ஒப்பிட்டு பேசுகிறீங்க.. மோடியுடன் ஏன் ஒப்பிட்டு பேசக் கூடாது?
அன்னைக்கு ஒரு நிகழ்ச்சியல சொல்றாங்க..அம்பேத்காரின் விருதை அம்பேத்கரே வாங்கி அம்பேத்காருக்கு கொடுக்குறாருனு ஸ்டாலினுக்கு கொடுத்தீங்க.. அதுலாம் ஓகேவா உங்களுக்கு… ஏய்.. ஏய்.. ஏய் பதில சொல்றா… அம்பேத்கர் விருதை இன்னொரு அம்பேத்கருனு சொல்ற திருமாவளவன் கையால ஸ்டாலினுக்கு கொடுத்தீங்களே அது ஓகேவா உனக்கு
முதலே அரசியல் பற்றி பேச வேண்டானு சொன்னேன்… நீ துண்டிவிட்டுட்ட இனி நிச்சயம் பேட்டி நல்லா வராது. இப்படி தான் பதில் சொல்வேன். நேர்காணல் முழுவதும் இளையராஜா குறித்து பேசிட்டே இருக்கலாமுனு கங்கை அமரன் கோபமாக கேள்வி எழுப்பினார்.