தமிழகத்தில் இஸ்லாமிய மக்களால் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு இருப்பது 3வது கடமையாகும். தமிழ்நாட்டில் ரமலான் பிறை ஏப்ரல் 3ஆம் தேதி தென்பட்டதை அடுத்து தலைமை காஜியால் நோன்பு அறிவிக்கப்பட்டது. ஷவ்வால் மாதத்தின் 30 வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆனால் நேற்று முன்தினம் பிறை தெரியாத காரணத்தால் தமிழ்நாட்டில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இசுலாமிய மக்கள் ரமலான் வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.