ரஷ்ய டாங்கிகள் மற்றும் ராணுவ வாகனங்களை உக்ரைன் தாக்கி அழித்த காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் டொனஸ்க்-ல் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
டொனஸ்க்-ல் தாக்குதலில் ஈடுபட்டு வந்த ரஷ்ய டாங்கிகளையே உக்ரைன் படைகள் தாக்கி அழித்துள்ளன.
வீடியோவில், தரையில் 3 ரஷ்ய டாங்கிகள் இருக்கும் நிலையில், முதல் நடுவில் இருக்கும் டாங்கியை குண்டு வீசி தாக்கிய உக்ரைன் படைகள், சில நொடிகளில் அதற்கு பின்னால் இருந்த டாங்கியை தாக்கி அழிகின்றன.
உக்ரைனுக்கு செல்லமாட்டேன்! வெளிப்படையாக காரணத்தை கூறிய ஜேர்மன் சான்சலர்
உக்ரைனின் 25வது தனி வான்வழிப் படை இந்த தாக்குதலை நடத்தியதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
🇺🇦 The 25th Separate Airborne Brigade is working pic.twitter.com/v96sJMnBT1
— C4H10FO2P (@markito0171) May 3, 2022
முன்னதாக, ஸ்னேக் தீவில் ரஷ்ய ரோந்து படகுகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பை ட்ரோன் மூலம் உக்ரைன் தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.