லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி மீது பாலம் கட்டும் பணிகளை நிறைவு செய்துள்ள சீனா, தற்போது புதிதாக சாலைகளை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குர்னாக் என்ற இடத்தில், பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீனா மிகப்பெரிய பாலம் ஒன்றை கட்டி வருவது தெரிய வந்தது. இந்த பாலத்தின் மூலம் படைகளை விரைவாக திரட்ட முடியும் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லடாக்கிற்குள் எளிதில் ஊடுருவும் வகையில் சீனா புதிய சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. வீரர்கள் மற்றும் பொருட்களை விரைவாக அனுப்புவதற்கு ஏதுவாக இந்த சாலைகள் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.