லடாக் பகுதியில் எல்லை அருகே மீண்டும் சாலை அமைக்கும் சீனா

பீஜிங்:

இந்தியாவின் வட எல்லையில் உள்ள லடாக் பிராந்தியத்தில் சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது. லடாக் பிராந்தியத்தில் இந்தியா சீனாவை பிரிக்கும் பாங்காங் ஏரியில் சீனா ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று வருகிறது.

இதையடுத்து அந்த பகுதியில் இந்தியா ராணுவத்தை குவித்துள்ளது. சீனாவை போன்று இந்தியாவும் லடாக் எல்லையில் நவீன சாலைகளை அமைத்துள்ளது.

இந்த நிலையில் லடாக் பிராந்தியத்துக்குள் மிக எளிதாக ஊடுருவும் வகையில் சீனா மீண்டும் புதிய சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பாங்காங் ஏரியில் மிக பிரமாண்ட பாலம் ஒன்றை கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் அந்த பாலம் அமைந்து வருகிறது. சர்வதேச எல்லைக் கோட்டுக்கு மிக அருகில் இது அமைந்துள்ளது. சாட்டிலைட் படங்கள் மூலம் இது உறுதிபடுத்தப் பட்டுள்ளது.

சீனாவின் இந்தியா நடிக்கைகளுக்கு இந்திய தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஏற்பட்டது போன்று எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது அந்த பகுதியில் சுமார் 200 மீட்டர் இடைவெளியில் இந்திய வீரர்களும், சீன வீரர்களும் எதிர் எதிரே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.