Tamil Reality Show Update : விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 3-வது சீசனை எட்டியுள்ளது. சமையல் கலைஞர்கள், ஒருபுறம் சமைக்க மறுபுறம் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில். கோமாளிகள் செய்யும் ரகளைதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய கரு.
இதில் முதல் சீசனில் நடிகை வனிதா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், 2-வது சீசனில், கனி திரு வெற்றி பெற்றதை தொடர்ந்து. சமீபத்தில் 3வது சீசன் தொடங்கப்பட்டது. ஆனால் முதல் சீசனை விட 2-வது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது ஆனால், தற்போது தொடங்கியுள்ள 3-வது சீசன் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
இதனால் இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், பிரபலங்கள் பலரையும் நிகழ்ச்சிக்கு அழைத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கு ப்ரமோஷனாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காகவும் அவர் வந்துள்ளார்.
அவருடன் டான் படத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றுள்ள நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக பங்கேற்றுள்ள ஷிவாங்கி டான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிக்கட்டத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நேரடியாக பங்கேற்ற நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் காணெடிலி மூலமாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
“ “