உக்ரைனின் ஒடேசா நகரில் ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலால் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கட்டிடங்களை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்த காட்சிகளை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது.
நேற்று குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் வீடுகள் தீயில் கருகி சேதமடைந்திருந்ததுடன், தேவாலயம் ஒன்றின் ஜன்னல்கள் நொறுங்கிக்கிடந்தன. இதனிடையே, மாணவர் விடுதி ஒன்றின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும் மற்றும் 17 வயது சிறுமி காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.