தற்போதைய விஞ்ஞான காலகட்டத்தில் புதுவகையான நோய்கள் தாக்கி வருகின்றது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களை நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயற்கை பொருட்களை நாடிச்செல்கின்றனர். இதனை பயன்படுத்திக்கொள்ள பலரும் தங்களது சமூக வலைதளங்களில் இயற்கை பொருட்கள் குறித்து அவற்றை விளைவிப்பது குறித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நாட்டுப்புற பாடல் தம்பதியான புஷ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி இருவரும் மாடித்தோட்டம் எப்படி அமைப்பது என்பது குறித்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவர்கள் இயற்கை முறையில் முளைக்கீரை விதைப்பது எப்படி என்பது தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர்.
முளைக்கீரை விதைப்பது எப்படி?
கீரை விதைப்பதற்கு ஒரு அடி அல்லது முக்கால் அடி ஆழம் போதுமானது. இதை பிளாஸ்டிக் ட்ரம் அல்லது கீரை விதைக்கும் பை கொண்டு விதைக்கலாம். முதலில், கீரை பிளாஸ்டிக் ட்ரம்மில் விதைப்பது என்றால், தண்ணீர் அதிகம் நிற்காதபடி அதில் இரண்டு ஓட்டைகள் போட வேண்டும்.
அடுத்து அந்த அதில் முதலில் ஆற்று மணலை அடியில் நிறப்ப வேண்டும். ட்ரம்மில்போட்டுள்ள ஓட்டை வழியாக மணல் வெளியேறி விடாமல் இருக்க அதில் பாணை ஓட்டை வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு மணலுக்கு மேல் உரத்தை நிறப்ப வேண்டும்.
மாட்டுச்சாணம், செம்மண், தென்னம்பஞ்சு இவை மூன்றும் கலந்த உரத்தை நிறப்ப வேண்டும். இதில் ஆட்சுச்சாணத்தையும் பயன்படுத்தலாம். தென்னம்பஞ்சு இலையை கொடுக்கும் ஈரத்தை தக்கவைத்துக்கொள்ளும். இந்த கலவை கட்டியாக இருந்தால் உடைத்தக்கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு மி.கி விதை எடுத்து பரவலாக தூவி விட்டு மண்னை கிளறி விடவும். மிகவும் ஆழமாக போகமால் லேசாக கிளறி விடுவது நல்லது. அதேபோல் இதற்கு முன்பே தண்ணீர் ஊற்றாமல் விதைகளை தூவி விட்டு மண்னை கிளறி விட்டபின்பு தான் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஊற்றக்கூடாது.
இந்த விதை விதைத்த பிளாஸ்டிக் ட்ரம்மை அதிக வெயில் படும் இடத்தில் வைக்காமல், அரை நிழலில் பட்டும் படாமல் இருக்கும் வெயிலில் மட்டுமே வைக்க வேண்டும். கொஞ்சம் வளர்ந்த பின்பு அரை வெளியில்ல வைக்கலாம் அவ்வளவுதான். இப்படி வைக்கும்போது விதைகள்3-வது நாளில் முளைத்தவிடும். 20-வது நாள் கீரை எடுத்து சமைக்கலாம்.
“ “