கொழும்பு – ஹொரணை பிரதான வீதியின் பொகுந்தர பிரதேசத்தில் வீதியை மறித்து இன்று (03) இரவு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எரிபொருட்கள் கிடைக்காத காரணத்தினால் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மக்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீதியில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியின்மையுடன் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.00 மணியளவில் பொகுந்தர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் சேகரிப்பதற்காக வந்திருந்த போதிலும், மாலை 5.00 மணியளவில் எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்கள் பதற்றமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 7.30 மணியளவில் கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் பொகுந்தர பகுதியில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.