டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பாதிப்புக்குள்ளான பறவைகள் ஹரியானாவின் குருகிராமில் பறவைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து பறவைகள் மருத்துவமனையின் மருத்துவர் பேசியபோது, கடந்த ஏப்ரல் மாத இறுதி முதலே வெப்பத்தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறினார்.
இதுவரை 198 பறவைகள் வரை பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேச மாநிலங்களில் அடுத்த 6 முதல் 7 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.