ஸ்டைலான நடை… கண்கவரும் நகை… இணையத்தை அலறவிடும் சுஜிதா தனுஷ் வீடியோ

Tamil Serial Actress Sujitha Dhanush Update : சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுஜிதா தனுஷ். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான இவர், பிறந்து சில மாதங்களிலேயே பாக்யராஜின் முந்தனை முடிச்சு படத்தில் அவரது குழந்தையாக நடித்திருந்தார்.

அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரம் மற்றும் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சுஜிதா, வாலி படத்தில் நடிகர் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டுமே அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது.

தமிழ் மட்டும்ல்லாமல். பாண்டியன் ஸ்டோர்ஸ் தெங்கு ரீமேக்கிலும் குடும்பத்தின் மூத்த மருமகளாக நடித்திருந்தார் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் ஆர்வம் கொண்ட சுஜிதா சமீபத்தில், நடிகை ஹன்சிகாவை வைத்து விளம்பரப்படம் ஒன்றை இயக்கினார். இது தொடர்பான வீடியோ பதிவு அவரின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

மேலும் கதைகேளு கதைகேளு என்ற யூடியூப் சேனல் மூலம் குழந்தைகளுக்கு கதை சொல்லும் சுஜிதா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜனிடம் விருது வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில். சுஜிதா தனுஷ் தற்போது ஸ்டைலிஷான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நகை விளம்பரத்தில் வரும் மாடல் போல் காட்சியளிக்கும் சுஜிதா பாரம்பரிய உடையான சேலையில் ஸ்டைலிஷாக நடந்து வருகிறார். அவர் அணிந்திருக்கும் நடிகைகள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.  

 “


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.