சென்னை: தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலும், வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு ஓரிருஇடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுவரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மேலும்திருத்தணியில் 105 டிகிரி, தஞ்சாவூர், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி, கரூர்பரமத்தி, திருச்சி ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, சென்னை விமான நிலையம், ஈரோடு ஆகியஇடங்களில் தலா 102 டிகிரி, மதுரைமாநகரில் 101 டிகிரி, அதிராம்பட்டினம், சென்னை நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, கடலூர், நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.