பணி புரியும் ஊழியர்களுக்கு என்ன தான் நிறுவனம் மாதந்தோறும் சம்பளம் என்பதை கொடுத்தாலும், வருடத்தில் ஒரு முறை தீபாவளியோ, பொங்கலோ போனஸ் வாங்கினால் அது மிக மகிழ்ச்சியினை தரும்.
அது போல் தான் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு டிவிடெண்ட் என்பது, ஒரு போனஸ் போல பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும், தங்களது லாபத்தில் முதலீட்டாளர்களுக்கு கணிசமான தொகையினை பகிர்ந்து அளிக்கும். இதனைத் தான் டிவிடெண்ட் என்பார்கள்.
அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவுக்குப் பரிசு அளிக்க சூப்பர் ஐடியா!
2 பங்குகள் பரிந்துரை
கடந்த ஆண்டில் நிறுவனங்கள் கடுமையான சூழலை எதிர்கொண்டிருந்தாலும், பல நிறுவனங்களும் தங்களது டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பஜாஜ் ஆட்டோ மற்றும் மகராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் என இரு நிறுவனங்களும் டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இவ்விரு நிறுவனங்களுமே நல்ல வருவாய் வளர்ச்சியினை கண்டுள்ளன.
மகராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ்
மகராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல தசாப்தங்களாக தொடர்ந்து டிவிடெண்டினை அறிவித்து வருகின்றது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் தொடர்ச்சியாக இரு தசாப்தங்களாக தொடர்ந்து டிவிடெண்டினை கொடுத்து வருகின்றது. இந்த நிறுவனம் டிவிடெண்ட் 800% அல்லது ஒரு பங்கிற்கு 80 ரூபாய் டிவிடெண்ட் அறிவிப்பினை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்போது அறிவிப்பு
இந்த நிலையில் மகராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் டிவிடெண்ட் பற்றிய இறுதி முடிவானது ஜூன் 1, 2022 அன்று எடுக்கப்படவுள்ளது. ஆக அதற்கு முன்பாக பங்குகளை வாங்க முதலீட்டாளர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் உற்பத்தி
இந்த நிறுவனம் 1976ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி முதல் பிரியா பிராண்டின் மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை தயாரிக்க தொடங்கியது. அதன் பிறகு பஜாஜ் சூப்பர். பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் மாடல்களை தயாரிக்க தொடங்கியது. அதன் பின்னர் கியர் ஸ்கூட்டர்களில் இருந்து நுகர்வோரின் விருப்பம், மோட்டார் சைக்கிள்களுக்கு மாறிய நிலையில், ஏப்ரல் 1, 2006 முதல் கியர் ஸ்கூட்டர்களின் உற்பத்தியினை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போதும் 2 & 3 சக்கர வாகன உற்பத்தியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது.
பஜாஜ் ஆட்டோ
மகராஷ்டிரா ஸ்கூட்டரை போலவே டிவிடெண்ட் மற்றும் போனஸ் பங்குகளை அறிவிக்கும் நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோவும் ஒன்று. இதுவும் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1400% அல்லது ஒரு பங்குக்கு 140% டிவிடெண்டினை அறிவித்துள்ளது. தற்போதைய சந்தை விலையில் 3.26% டிவிடெண்ட் ஆக அறிவித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோவின் நிகர லாபம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல ஆண்டுகளாகவே டிவிடெண்ட் அறிவித்து வரும் ஒரு நல்ல பங்காக இருந்து வருகின்றது.
கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 10.27% அதிகரித்து, 1468.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1332.07 கோடி ரூபாயாக இருந்தது.
விற்பனை சரிவு
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் விற்பனையில் சரிவினைக் கண்டுள்ள போதிலும் கூட, சாதகமான அறிவிப்பினை கொடுத்துள்ளது. நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 20% விற்பனை குறைந்து, 3,10,774 யூனிட்களாக சரிவினைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் 3,88,016 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாங்கலாம்
இதற்கிடையில் பஜாஜ் ஆட்டோ பங்கின் விலையானது அதன் 52 வார உச்ச விலையில் இருந்து 700 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுத்தால், இப்பங்கானது அதிகரிக்கலாம். ஆக இப்பங்கினை நீண்டகால நோக்கில் வாங்கலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
Disclaimer: This recommendations made above are those of individual analysts or broking companies, and not for good returns
Analysts suggest these 2 Auto stocks to buy now that will give 800% and 1400% dividend
Analysts suggest these 2 Auto stocks to buy now that will give 800% and 1400% dividend/800% & 1400% டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனங்கள்..இந்த 2 பங்குகளை வாங்கி போடுங்க..!