9 மாதத்தில் 900 மில்லியன் டாலர்.. அசத்தும் Zepto-வின் 19வயது நிறுவனர்..!

இந்தியாவில் குவிக் டெலிவரி சேவை நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்துடன் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், போட்டியும் அதிகரித்துள்ளது.

ஆனால் 19 வயது சிறுவன் உருவாக்கிய Zepto நிறுவனம் இன்று மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை உருவாக்கி, அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்று வெறும் 9 மாதத்தில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளனர்.

startup

குவிக் டெலிவரி சேவை

ஸ்விக்கி, பிளிங்க்இட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் Zepto நிறுவனம், அதிகாரப்பூர்வமாக வர்த்தகத்தைத் துவங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே ஆன நிலையில் தற்போது 3 முறை முதலீட்டைத் திரட்டியுள்ளது.

ஸ்டான்போர்டு

ஸ்டான்போர்டு

ஸ்டான்போர்டு கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு 17 வயதில் இந்தியாவுக்குச் சொந்த தொழில் துவங்க வேண்டும் என்ற மிகப்பெரிய வர்த்தகக் கனவுடன் வந்தார் ஆதித் பளிச்சா. இந்நிலையில் ஆதித் பளிச்சா தனது நண்பர் கைவல்யா வோஹ்ரா உடன் இணைந்து 2020 செப்டம்பரில் கிரானாகார்ட் என்னும் நிறுவனத்தை உருவாக்கினார்.

கிரானாகார்ட்
 

கிரானாகார்ட்

இந்தக் கிரானாகார்ட் மூலம் மளிகைக்கடைகள் உடன் கூட்டணி சேர்ந்து மக்களுக்குத் தேவையான பொருட்களை உடனடியாக டெலிவரி செய்வது தான் பிஸ்னஸ் மாடல். இதை Zepto எனப் பெயர் மாற்றி டார்க் ஸ்டோர்ஸ் கட்டமைப்பில் 10 நிமிட இன்ஸ்டென்ட் டெலிவரி கொடுக்கும் சேவையை அறிமுகம் செய்தார் ஆதித் பளிச்சா.

Zepto அறிமுகம்

Zepto அறிமுகம்

ஆதித் பளிச்சா Zepto நிறுவனத்தை அறிமுகம் செய்த 6 மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகம் வாடிக்கையாளர்களைப் பெற்ற நிலையில் நிறுவனத்தின் மதிப்பு 225 மில்லியன் டாலராக உயர்ந்து 60 மில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டினர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 2021ல் 100 மில்லியன் டாலர்.

11 நகரங்கள்

11 நகரங்கள்

மே 2022ல் சுமார் Zepto நிறுவனம் தனது வர்த்தகத்தை 11 நகரங்களில் விரிவாக்கம் செய்து 200க்கும் அதிகமான டார்க் ஸ்டோர்ஸ் உருவாக்கி 900 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் புதிதாக 200 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகப் பெற்றுள்ளது Zepto.

900 மில்லியன் டாலர் மதிப்பீடு

900 மில்லியன் டாலர் மதிப்பீடு

இதன் மூலம் வெறும் 9 மாதத்தில் அதாவது முதல் முதலீட்டைத் திரட்டிய பின்பு Zepto சுமார் 900 மில்லியன் டாலர் தொகைக்கு மதிப்பிடப்பட்டு உள்ளது. Zepto உடன் தற்போது ப்லிங்கிட், இன்ஸ்டாமார்ட், டன்சோ நேரடியாகப் போட்டிப்போட்டு வருகிறது. ப்லிங்கிட் ஏற்கனவே தாக்குப் பிடிக்க முடியாமல் சோமேட்டோ உடன் வர்த்தகத்தை விற்பனை செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Zepto: 19yr old college dropout aadit palicha created $900 mn startup in just 9 months

Zepto: 19yr old college dropout aadit palicha created $900 mn startup in just 9 months 9 மாதத்தில் 900 மில்லியன் டாலர்.. அசத்தும் Zepto-வின் 19வயது நிறுவனர்..!

Story first published: Tuesday, May 3, 2022, 12:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.