Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
புனித ரமலான் பண்டிகை கோலாகலம்!
இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு ஏப். 3 அன்று அதிகாலை தொடங்கியது. பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ஆனால், இந்த ஆண்டு பிறை தென்படாத நிலையில், இன்று (மே.3) ரமலான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை செழிப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இன்று அட்சய திருதியை!
அட்சய திருதியை, தங்கம் வாங்குவதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு இன்று அட்சய திருதியை வருகிறது. த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, அட்சய திருதியை பூஜை முகூர்த்தம் மே 3 அன்று காலை 05:39 மணிக்கு தொடங்கி மதியம் 12:18 மணிக்கு முடிவடையும். திருதியை திதி மே 3 ஆம் தேதி காலை 5:18 மணிக்கு தொடங்கி மே 4 காலை 7:32 மணிக்கு முடிவடையும். மே 3 ஆம் தேதி காலை 05:39 மணி முதல் மே 4 ஆம் தேதி காலை 05:38 மணி வரை தங்கம் வாங்க உகந்த நேரம்.
IPL 2022: கொல்கத்தா அணி வெற்றி!
ஐபிஎல் போட்டியின் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஆட்டத்தின் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. 153 ரன்கள் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
Tamil Nadu news live update
கத்தரி வெயில் தொடக்கம்!
வேலூரில் வரும் மே 4 முதல் கத்தரிவெயில் தொடங்க உள்ள நிலையில், காலை 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள்,நோயாளிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது!
திருப்பூரில் நூல் விலை உயர்வு காரணமாக, வரும் மே16 முதல் மே21 வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என பின்னலாடை தொழில் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
“ “
தமிழ்நாட்டில் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ‘மத்திய’ அரசு என்ற வார்த்தையை ‘ஒன்றிய’ அரசு என மாற்றவும், ஆளுநர் அதிகாரம் குறித்து இடம் பெற்றிருக்கும் பாடத்திட்டங்களில் சில திருத்தங்கள் செய்து புதிய புத்தகங்கள் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வின் போது, தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுதேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்யவும், மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனே மாற்று வசதி ஏற்படுத்த தயார் நிலையில் இருக்கவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் ரம்ஜான் வாழ்த்து!
ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை நேரத்தில் நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள்- ஆளுநர் ஆர்.என்.ரவி ரம்ஜான் வாழ்த்து!
அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு வாழ்த்துகள்–முதல்வர் ஸ்டாலின்!
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் இரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தி pic.twitter.com/jzLYLY0dZd
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 2, 2022
ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு வாழ்த்துகள்!
பிறை பார்த்தலில் தொடங்கி பிறை பார்த்தலில் நிறைவுறும் நோன்புக் காலம் ரமதான். சுய கட்டுப்பாடு, பிறர் மேல் பரிவு, ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 3, 2022
கருங்கடலில் ஸ்மினி தீவு அருகே ரஷ்யாவின் 2 ரோந்து கப்பல்களை தாக்கி அழித்துள்ளதாக, உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
சித்திரை மாத பௌர்ணமி திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியலில் ரூ. 1.33 கோடி, 290 கிராம் தங்கம் காணிக்கை வசூல் வந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.