அட்சய திருதியையில் தங்கம் வாங்குவோருக்கு நல்ல செய்தி.. சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது!

அட்சய திருதியை பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.

முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் எதிரொலியாகத் தங்கம் விலை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஃபெடரல் வங்கி கூட்டம்

அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டத்தை சர்வதேச சந்தை உற்று நோக்கி வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

செழிப்பும் அதிர்ஷ்டமும்

செழிப்பும் அதிர்ஷ்டமும்

இன்று அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செழிப்பும் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியன்று வாங்கப்படும் தங்கத்தின் மதிப்பு குறையாது என்றும், தொடர்ந்து மதிப்பு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதை கொண்டாடும் விதமாக செய்யும் விதமாக தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்
 

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் (22 காரட்) விலை கிராம் ஒன்றுக்கு 22 ரூபாய் குறைந்து 4,816 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்து 38,528 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 பைசா குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 67,000 ரூபாயாக உள்ளது.

24 காரட் தங்கம் விலை

24 காரட் தங்கம் விலை

24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5,215 ரூபாய் என்றும் சவரன் (8 கிராம்) 41,720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

அட்சய திருதியை

அட்சய திருதியை

2022-ம் ஆண்டு, அட்சய திருதியை மே 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மே 3-ம் தேதி காலை 5.18 மணிக்குத் தொடங்கும் அட்சய திருதியை, மே 4-ம் தேதி காலை 7:32 மணி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

முகூர்த்த நேரம்

முகூர்த்த நேரம்

இந்த வருடம் அட்சய திருதியை அன்று காலை 5:49 மணி முதல் மதியம் 12:13 முகூர்த்த நேரமாகக் குறித்துள்ளனர். இந்த நேரத்தில் மக்கள் தங்கம் வாங்க அதிகளவில் கடைகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதுவும் வாங்கலாம்

இதுவும் வாங்கலாம்

அட்சய திருதியை அன்று தங்கம் தான் என்றல்ல. அரிசி, கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் நல்லதுதான். இதை செய்வதன் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அட்சய திருதியை அன்று கடவுளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold Rate Decreases On Akshaya Tritiya, Check Today Rates

Gold Rate Decreases On Akshaya Tritiya, Check Today Rates | அட்சய திருதியையில் தங்கம் வாங்குவோருக்கு நல்ல செய்தி.. சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.