உக்ரைனுக்கு 40 நாடுகள் உதவுவதை நிறுத்தாவிட்டால், கடைசி நடவடிக்கையாக அணுகுண்டு வீசுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று கூறியுள்ளார் புடின் ஆதரவு ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவர்.
Alexander Sladkov என்னும் அந்த நபர், அமெரிக்கர்கள் ஜப்பான் மீது அணுகுண்டு வீசினார்கள், அவர்களைப் போலவே, ரஷ்யாவும் உக்ரைனில் அதை செய்து, நேட்டோ நாடுகளை அவமதிக்கும் வகையில் மற்ற 40 நாடுகளுக்கும் அதை செய்துகாட்டவேண்டும்.
எல்லாம் சாத்தியம்தான், அதை அமெரிக்கர்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நாங்களும் கற்றுக்கொள்கிறோம் என்று கூறும் Alexander, இப்போது பிரச்சினை அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்.
அப்படி உக்ரைன் மீது அணுகுண்டு வீசுவது, குறைந்த செலவில், வேகமாக உக்ரைன் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று கூறும் Alexander, பிரம்மாண்ட அணு ஆயுதம் ஒன்றை வைத்திருக்கும் ஒரு நாட்டை யாரும் எரிச்சலூட்டிக்கொண்டே இருக்கக்கூடாது என்பது ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் புரியமாட்டேன்கிறது என்றும் கூறியுள்ளார்.