ஆண்கள், சிறுவர்கள் உட்பட… ரஷ்ய வீரர்களின் அட்டூழியங்கள்: ஐ.நா விசாரணைக் குழு அம்பலம்


உக்ரேனிய பெண்கள் மட்டுமின்றி ஆண்கள், சிறுவர்களையும் ரஷ்ய வீரர்கள் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக ஐநா மற்றும் கீவ் விசாரணைக் குழு அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை 2 மாதங்களுக்கு பின்னரும் நீடித்து வருகிறது.
மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மீதான போர் என குறிப்பிட்டு வரும் நிலையில், ரஷ்யா அதனை மறுத்துள்ளதுடன், இதுவரை சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றே கூறி வருகிறது.

ஆனால், உக்ரைனில் உள்கட்டமைப்புகளை மொத்தமாக சிதைத்துவரும் ரஷ்ய துருப்புகள், பெண்கள் சிறுமிகள் மட்டுமின்றி, ஆண்கள், சிறுவர்களையும் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளது ஐநா விசாரணைக் குழுவினரால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், டசின் கணக்கான பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளதாகவும், இது முதற்கட்டம் மட்டுமே எனவும், ரஷ்ய வீரர்களின் அட்டூழியங்கள் அம்பலப்படுத்தப்படும் எனவும் கீவ் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆண்கள், சிறுவர்களுக்கு எதிரான ரஷ்ய துருப்புகளின் வன்கொடுமைகள் தொடர்பில் தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஆனால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் தரப்பு,
பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக புகார் தெரிவிக்க வேண்டும் எனவும், அவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு உறுதி அளித்துள்ளது.

போர் காலகட்டத்தில், பாலியல் வன்கொடுமையானது உலக நாடுகள் முன்னெடுக்கும் ம;லிவான ஆயுதங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள்,
இதுபோன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுபவர் மீது மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், மொத்த குடும்பத்தையும், அந்த சமூகத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இர்பின் நகரில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 228 பேர்களை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும், இது முதற்கட்டம் மட்டுமே எனவும், மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய துருப்புகள் கைவசப்படுத்திய பகுதிகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய துருப்புகள் வெளியேறிய பகுதிகளில் மட்டும், அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரங்கள் இருந்தபோதிலும், ரஷ்யா முன்னர் பொதுமக்களை குறிவைப்பதை மறுத்துள்ளது. மட்டுமின்றி உக்ரைனில் தமது படைகள் போர்க்குற்றங்களை இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்ய அதிகாரிகள் தரப்பும் நிராகரித்துள்ளது.

புச்சா நகரில் மட்டும் கட்டிடம் ஒன்றின் தரைத்தளத்தில் 25 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு ரஷ்ய துருப்புகள் தொடர் வன்கொடுமைக்கு இரையாக்கியது முன்னர் வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும், உக்ரைனில் தற்போது நடக்கும் அனைத்து விவகாரங்களுக்கும் முழு பொறுப்பு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒருவரே என ஐ.நா விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.