ஆன்லைனில் சூதாட்டம் மற்றும் பந்தயம் சம்பந்தப்பட்ட கேம் செயலிகளை கட்டுப்படுத்த, 18 சதவீதமாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 28 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்போது ஆன்லைன் கேம் செயலிகளுக்கான கட்டணத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பந்தயம் மற்றும் லாட்டரி போன்ற வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டுகளின் நுழைவு கட்டணத்துக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் எவ்வளவு தெரியுமா..?
ஜிஎஸ்டி கவுன்சில் அமைச்சர்கள் குழு
கேசினோக்கள், ரேஸ் கோர்ஸ்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் ஆகியவற்றின் மீதான வரிவிதிப்பு தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் அமைச்சர்கள் குழு (GoM) திறன் அடிப்படையிலான கேமிங் மற்றும் வாய்ப்பு அடிப்படையிலான கேமிங் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை நீக்கி 28 சதவீத ஜிஎஸ்டியை பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் கேமிங் மீதான இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்த முடிவை இன்னும் 2 வாரத்தில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
குழப்பம்
ஆன்லைன் கேமிங் நுழைவு கட்டணம் அல்லது மொத்த கேமிங் வருவாய் இரண்டில் எதற்கு வரி வசூலிப்பது என்ற குழப்பமும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களிடையில் உள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் துறை
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் கேமிங் துறை ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 சதவீத வளர்ச்சியையும் பெற்று வருகிறது. எனவே ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நாம் சமூகம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொழில்துறைகளையும் மனதில் கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் குழு அழைப்பாளரும் மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சில்
அமைச்சர்கள் குழு என்ன முடிவு எடுத்தாலும், இறுதி முடிவை அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையை வைத்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு எடுக்கும்.
இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை
“திறன் அடிப்படையிலான கேமிங் மற்றும் வாய்ப்பு அடிப்படையிலான கேமிங் இரண்டுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை. இவை சிறுவர்களைச் சூதாட்டத்தை நோக்கித் தள்ளுகின்றன. வளரும் இளம் சமூகத்தின் மீது நேரடியாக இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு உறுப்பினரும் மேற்கு வங்க நிதி அமைச்சருமான சந்திரமா பட்டாச்சார்யா கூறுகின்றார்.
சட்ட திருத்தம் தேவை
ஆன்லைன் கேமிங் அல்லது இந்த வாய்ப்பு அடிப்படையிலான கேம்கள் மீது வரி விதிக்க ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டி வரும்.
அதற்கு முன் ஆன்லைன் கேமிங் துறையைச் சுற்றியுள்ள இரண்டு முக்கிய சிக்கல்கள், திறமை விளையாட்டுகளும் வாய்ப்புக்கான கேம்களுக்கு இணையாகக் கருதப்பட வேண்டுமா அல்லது வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டுமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும், அல்லது சட்டத்தில் திருத்தம் செய்வது முக்கியம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
Soon GST On Online Gaming May Be Raised To 28%
Soon GST On Online Gaming May Be Raised To 28% | ஆன்லைன் கேம்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உயருகிறது?