இந்திய அரசின் அதிரடி முடிவு.. FTA-வில் இருந்து 1157 பொருட்களுக்கு விலக்கு.. ஏன்?

தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை, சமையல் எண்ணெய், உணவு பொருட்கள், உரங்கள் என பலவற்றின் விலை சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வர இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் ஐக்கிய அரபி எமிரேட்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தினையும் போட்டது.

இந்த ஒப்பந்தமானது மே மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ப்ரீ டிரேட் அக்ரிமென்ட் (free trade agreement)ன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் இருந்து பல பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைப்பதாக அறிவித்தது.

ஆன்லைன் கேம்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உயருகிறது?

1157 பொருட்களுக்கு விலக்கு

1157 பொருட்களுக்கு விலக்கு

இந்த வரம்பற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து டிவி, பிக்சர் டியூப்ஸ், சோப்புகள், பொம்மைகள்,காலணிகள், இன்ஸ்டன்ட் காபி, சர்பத், பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் உள்பட 1157 பொருட்களூக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆக இதன் மூலம் 1157 பொருட்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தயாரிப்புகள்

என்னென்ன தயாரிப்புகள்

இந்த தயாரிப்புகளில் நகைகள், பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் காப்பர் ஸ்கிராப்கள், ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரி பாகங்கள், மருத்துவ சாதனங்கள், பால் பொருட்கள், பழங்கள், தானியங்கள், சர்க்கரை, உணவு தயாரிப்புகள், புகையிலை பொருட்கள், சாயங்கள் மற்றும் நிறமிகள், நேச்சுரல் ரப்பர், டயர்கள் மற்றும் மார்பிள்கள் என பலவும் அடங்கும்.

2 ஆண்டுக்கு ஒருமுறை பரிசீலனை
 

2 ஆண்டுக்கு ஒருமுறை பரிசீலனை

இந்த ஒப்பந்தமானது செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தினை மேலும் மேம்படுத்த, குழு ஒன்று 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடி பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேவை வணிகத்தினையும் மேம்படுத்த வணிகம், ஐடி உள்பட, கட்டுமானம், கல்வி மற்றும் நிதி சார்ந்த 11 பிரிவுகளில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.

வரி குறையலாம்

வரி குறையலாம்

எது எப்படியோ மே மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ், இந்தியா UAE-ல் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு வரியை குறைத்துள்ளது. அதேபோல இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு UAE-ல் வரி குறைக்கப்படும். பல பொருட்களுக்கு வரியும் நீக்கப்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UAE trade deal: india excludes 1157 products from ambit of free trade pact

UAE trade deal: india excludes 1157 products from ambit of free trade pact/இந்திய அரசின் அதிரடி முடிவு.. FTA-வில் இருந்து 1157 பொருட்களுக்கு விலக்கு.. ஏன்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.