இந்திய வம்சாவளி இளைஞரின் கொடூரம்: கனடாவை உலுக்கிய சம்பவத்தில் முக்கிய திருப்பம்


கனடாவில் குடியிருப்பு அருகாமையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண் விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவரை லண்டன் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வடக்கு லண்டனில் தமது குடியிருப்புக்கு அருகாமையிலேயே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் 30 வயதான Lynda Marques.

செவிலியரான Lynda Marques கொல்லப்படுவதற்கு முன்னர் சொந்தமாக சுகாதார மையம் ஒன்றையும் திறந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மூவர் கும்பல் ஒன்று Lynda Marques-ஐ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளது.

செப்டம்பர் 10ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், 15ம் திகதி, சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறும் வாகனத்தை கைவிடப்பட்ட நிலையில் பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் தீவிரமாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,
புதன்கிழமை லண்டன் பொலிசார் வெளியிட்ட தகவலில், ரொறன்ரோ பகுதியை சேர்ந்த 18 வயது இந்திய வம்சாவளி அமர் பட்டேல் என்பவரை Lynda Marques கொலை வழக்கு தொடர்பில் கைது செய்துள்ளதாகவும்,
அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் பலர் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

லிண்டாவின் கொலையில் தொடர்புடையவர்கள் செப்டம்பர் 9 அன்று ரொறன்ரோ பகுதியில் இருந்து லண்டனுக்குச் சென்று லிண்டாவின் கொலைக்குப் பிறகு உடனடியாக நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.