உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
உக்ரைனின் மேற்கில் இருக்கும் Rivne பகுதியில் உள்ள நெடுஞ்சாலையிலே இந்த கோர விபத்து நடந்துள்ளது.
பேருந்து மற்றும் மினி பேருந்துடன் எரிபொருள் டிரக் மோதி வெடித்து சிதறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதில் 3 வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. பேருந்து போலந்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கோர விபத்தில் 24 பயணிகள் மற்றும் பேருந்து, மினி பேருந்தின் ஓட்டுநர்கள் இருவர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பான் பிரதமருக்கு எதிராக ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
மேலும், எரிபொருள் டிரக் ஓட்டுநர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.