உக்ரைன் – ரஷ்யா போரால் பொருளாதாரம் கடும் பாதிப்பு!: வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.40% உயர்வு..!!

டெல்லி: குறுகிய கால கடன்களுக்கான வங்கி வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் நடந்து வரும் யுத்தம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகியகால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) 0.40 சதவீதம் உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் வட்டி விகிதம் உயர்வை கண்டிருக்கிறது. நிதிக்கொள்கை குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வட்டி விகிதம் உயருகிறது  என தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.40 சதவீதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பணவீக்க விகிதம் உயர்ந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது.பங்குச்சந்தைகள் வீழ்ச்சி:வட்டி விகிதம் உயர்வு தொடர்பான ரிசர்வ் வங்கி அறிவிப்பை அடுத்து பங்குச்சந்தைகள் சரிய தொடங்கியது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரையிலும், நிஃப்டி 270 புள்ளிகள் வரையிலும் சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1000 புள்ளிகள் குறைந்து 56,921 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிஃடி குறியீட்டு எண் 5 புள்ளிகள் அதிகரித்து 16,808 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.