உயரமான இடத்தில் சீனா சாதனை| Dinamalar

பீஜிங்:உலகின் உயரமான இடத்தில் (28,969 அடி) வானிலை நிலையம் அமைத்து சீனா சாதனை படைத்துள்ளது.
உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 29,031.7 அடி. எவரெஸ்ட் சிகரத்தில் ஆய்வுக்கு சென்ற சீன விஞ்ஞானிகள் குழு அங்கு 28,969 அடி உயரத்தில் வானிலை நிலையத்தை அமைத்தனர். அதிக உயரத்தில் பனிப்பாறைகள் உருகுவதை கண்காணிப்பதே இதன் நோக்கம்.
சோலார் மின்சாரம் மூலம் இயங்கும் இது இங்கு நிலவும் மோசமான வானிலைக்கு தாக்கு பிடித்து 2 ஆண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தகவல்களை பெறுவதற்கு செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இது சுற்றுப்பகுதியின் வானிலை தகவல்களை 12 நிமிடத்துக்கு ஒருமுறை அனுப்பும்.
இதற்கு முன் எவரெஸ்டின் தெற்கு பகுதியில் பிரிட்டன் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து 27,657 அடி உயரத்தில் அமைத்திருந்த வானிலை நிலையம் தான் உலகின் உயரமாக இருந்தது. இதை சீனா முறியடித்துள்ளது. எவரெஸ்டின் வடக்கு பகுதியில் சீனா ஏற்கனவே 23,057 அடி 25,557 அடி 27,230 அடி உயரத்தில் மூன்று வானிலை நிலையத்தை அமைத்துள்ளது. மேலும் 17,060 அடி முதல் 27,230 அடி வரை ஏழு நிலையங்களை நிறுவியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.