ஐஸ்கிரீம் விற்பனையில் புதிய சாதனை.. தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் ஆவின்!

கோடைக்காலம் என்றால் பலரும் விரும்பி சாப்பிடும் பால் பொருளில் ஒன்று ஐஸ்கிரீம். குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து குளிர்ச்சியாக வழங்குவதால் ஐஸ்கிரீமை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வழக்கத்தை விட அதிகமான ஐஸ்கிரீம் விற்பனையாகி வருகிறது என தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஸ்கிரீம் பார்லர்களுக்கு 18% வரி பொருந்தும்.. மத்திய அரசின் விளக்கம் இதோ..!

ஆவின் பால் பொருட்கள்

ஆவின் பால் பொருட்கள்

ஆவின் நிறுவனம் பால் மட்டுமல்லாமல் நெய், தயிர், ஐஸ்கிரீம், இனிப்பு வகைகளையும் உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறது.

கோடைக்காலம்

கோடைக்காலம்

இப்போது கோடைக்காலம் என்பதால் ஆவின் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிகமாக 1.5 லட்சம் பீஸ் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருவதாகும், அதில் 1 லட்சம் ஐஸ்கிரீம் வரை மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனையாகுவதாகவும் தெரிவித்துள்ளது.

ஐஸ்கிரீம் உற்பத்தி
 

ஐஸ்கிரீம் உற்பத்தி

ஆவின் ஐஸ்கிரீம் திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலைகளில் ஒரு ஷிப்டிற்கு 40 ஆயிரம் வரை ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவை அதிகரித்தால் இன்னும் கூட உற்பத்தியை அதிகரிக்க முடியும் என கூறப்படுகிறது.

குல்பி ஐஸ்

குல்பி ஐஸ்

ஆவின் ஐஸ்கிரீமில் அதிகமாக மக்கள் குல்பி ஐஸ் தான் விரும்பி சாப்பிடுகின்றனர். தினமும் 10 ஆயிரம் முதல் 15,000 குல்பி ஐஸ் விற்பனையாகிறது. மழைக்காலங்களில் கூட 7000 குல்பி ஐஸ் விற்பனையாகிறது. குல்பி தான் தங்களது பிரதான ஐஸ்கிரீம் தயாரிப்பு என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற ஐஸ்கிரீம் வகைகள்

பிற ஐஸ்கிரீம் வகைகள்

குல்பி ஐஸ்கிரீமிற்கு அடுத்தபடியாக 10 ரூபாய் மதிப்பிலான வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம் சுவை கப் ஐஸ்கிரீம் மற்றும் சாக்கோ பார் ஆவின் ஐஸ்கிரீம் பொருட்களை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

பால் உற்பத்தி

பால் உற்பத்தி

ஆவின் நிறுவனம் தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் மூலம், தினமும் 34.5 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்கிறது. அதில் 3.5 லட்சம் லிட்டர் பாலை அந்தந்த கூட்டுறவுச் சங்கங்களிலேயே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்றுவிடுகிறது. 28.5 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டுகளில் நிரப்பி தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்கிறது.

 பால் விலை குறைப்பு

பால் விலை குறைப்பு

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பால் விலை குறைக்கப்பட்டது. அதனால் தினமும் 1.5 லட்சம் லிட்டர் வரை கூடுதலாகப் பால் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் 500 மிலி விலை 18 ரூபாய்க்கும், 1 லிட்டர் 37 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

 

 அடுத்தகட்ட திட்டம்

அடுத்தகட்ட திட்டம்

தமிழ்நாட்டில் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த கால கட்டத்தில் கிடைக்கும் உபரி பாலை மோர் மற்றும் பால் பவுடர்களாக மாற்றி விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Aavin Says Ice Cream Sales Increased than usual in this summer

Aavin Says Ice Cream Sales Increased than usual in this summer | ஐஸ்கிரீம் விற்பனையில் புதிய சாதனை.. தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் ஆவின்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.