உலகின் முதல்நிலை பணக்காரரான
எலான் மஸ்க்
பதிவிட்ட ட்வீட் சமூக வலைத்தள வாசிகளை உலுக்கிப்பார்த்தது. அந்த பதிவில்,
கோகோ கோலா
நிறுவனத்தை வாங்கப்போவதாகவும், முன்பிருந்த கொக்கைன் அளவை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த பதிவை ட்விட்டரை வாங்கிய மறுநாள் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த ட்வீட் பதிவுதான் ஹிட்டாகி உள்ளது. மொத்தம் 48 லட்சம் ட்விட்டர் வாசிகள் இந்த பதிவை ‘லைக்’ செய்துள்ளனர். இரண்டாவதாக அதிகம் லைக் பெற்ற ட்விட்டர் பதிவு இதுவாகும்.
எலான் மஸ்க் வைரல் ட்வீட்
“அடுத்து நான் கோகோ-கோலாவை வாங்கி, மீண்டும் பழையது போல கொக்கைனை சேர்க்க உள்ளேன்” என்று ஏப்ரல் 28, 2022 அன்று டெஸ்லா நிறுவனர் ட்வீட் செய்தார். மொத்தம் 87 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்கள் மஸ்கை பின் தொடர்ந்து வருகின்றனர். இவர்கள் வாயிலாக ட்விட்டர் முழுவதிலும் இந்த பதிவு தீயாய் பரவியது.
பொதுவாக எலான் மஸ்க் எப்படி தனது சமூக வலைத்தள பதிவுகளின் மூலம் வைரலாக மாறுவார் அல்லது அவர் அடுத்து என்ன செய்வார் என்பதைப் புரிந்துகொள்ள இது போன்ற அறிக்கைகள் கவனமாக ஆய்வு செய்யப்படுகின்றன. காரணம், சொன்னதை செய்து காட்டுபவர் எலான் என்ற பேச்சு டெக் நிறுவனங்களுக்கு மத்தியில் உண்டு.
Satellite Internet: ஸ்பேஸ் எக்ஸ்-க்கு போட்டியாக களமிறங்கும் அமேசான் புராஜக்ட் குயிப்பர்!
கோகோ கோலா நிறுவனம்
வணிக ரீதியில் உலகின் மிகவும் மதிப்புமிக்க குளிர்பான நிறுவனமாக Coca-Cola கருதப்படுகிறது. மஸ்க் பதிவிட்ட அன்று கோகோ கோலா பங்கின் விலை $65.56 டாலராகவும், நிறுவனத்தின் சந்தை மூலதனம் $284.20 பில்லியன் டாலராகவும் இருந்தது. ட்விட்டருக்கு எலான் மஸ்க் வழங்கிய ஒரு பங்கின் மதிப்பு $54.20 டாலர் ஆகும். இதைவிட கோகோ கோலா நிறுவனத்தின் பங்கு பன்மடங்கு அதிகமாகும்.
Fintwit என்ற நிதி தொடர்பான செய்திகளை வழங்கும் தளத்தின் ட்விட்டர் கணக்கு, இந்த தரவுகளை வெளிச்சம் போட்டு காட்டியது. மேலும், அந்நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “கோகோ கோலாவை வாங்க உங்களிடம் நிதி கிடையாது. அந்தவகையில் நீங்கள் மிகவும் ஏழ்மையானவர்” என்று தெரிவித்திருந்தது.
Russia Ukraine News: ட்ரோன் பயன்படுத்த வேண்டாம் – DJI நிறுவனம் போட்ட தடை!
கோலா வரலாறு
பத்தொன்பதாம் நூற்றாண்டில், கார்பனேற்றப்பட்ட குளிர்பானத்தின் சூத்திரத்தில் கொகைன் நிறைந்த கோகோ இலைகள் ஒரு ஒருங்கிணைந்த மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டன. இந்த கொகைன் நிறைந்த கோகோ இலைகள் இன்னும் மருந்தாகத் தான் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், போதைப்பொருள் களங்கள் இந்த குளிர்பானத்தில் மேல் விழுந்ததால், அமெரிக்காவின் உணவு பாதுகாப்புத் துறை, கோகோ கோலாவில் கொகைனை சேர்க்க தடை விதித்தது. இந்த தடையைத் தொடர்ந்து கோகோ-கோலாவின் ரகசிய சூத்திரத்தில் இருந்து கொகைன் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக டீகோகைனைஸ் செய்யப்பட்ட கோகோ இலைகள் பயன்படுத்தப்பட்டது.