ஓரே நாளில் ரூ.6.27 கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

புதன்கிழமை வர்த்தகம் ஒரு நாள் விடுமுறைக்குப் பின்பு துவங்கும் காரணத்தால் உயர்வுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கும் அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆயினும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் துவங்கினாலும் ஒரு மணிநேரத்திற்குள் சரிய துவங்கியது. ஆனால் அதன் பின்பு நடந்தது தான் மிகவும் முக்கியமானது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி.. சென்செக்ஸ் 1000+, நிப்டி 330+ புள்ளிகள் வரை சரிவு!

எல்ஐசி ஐபிஓ

எல்ஐசி ஐபிஓ

ஒருபக்கம் இந்தியாவின் மிகப்பெரிய எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ இன்று துவங்கியுள்ள நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் முதலீடு செய்து வந்தனர். ஆனால் ஆர்பிஐ-யின் அறிவிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வந்து மொத்த சந்தை போக்கையும் மாற்றிப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஆர்பிஐ அறிவிப்பு

திடீரென ஆர்பிஐ அறிவிப்பு

இன்று திடீரென ஆர்பிஐ வங்கி மதியம் 2 மணிக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து சக்தி காந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பில் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்கவும், உபரியாக இருக்கும் பணப்புழக்கத்தைக் குறைக்கவும் வட்டி விகிதங்கள் அடங்கிய முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

 ரெப்போ விகிதம்
 

ரெப்போ விகிதம்

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி 4.40% ஆக உயர்த்தியுள்ளது. இதேபோல் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான சிஆர்ஆர் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 4.5 சதவீதமாக அறிவித்துள்ளது.

 சென்செக்ஸ், நிஃப்டி

சென்செக்ஸ், நிஃப்டி

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1306.96 புள்ளிகள் சரிந்து 55,669.03 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60 புள்ளிகளை அடைந்துள்ளது.

6.27 கோடி ரூபாய் இழப்பு

6.27 கோடி ரூபாய் இழப்பு

இந்த மிகப்பெரிய சரிவின் வாயிலாகப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பில் சுமார் 6.27 கோடி ரூபாய் இழந்துள்ளனர். இதில் முக்கியமாக சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டைட்டன், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை 4 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எட்டியுள்ளது.

டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்

மேலும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பவர்கிரிட், என்டிபிசி, கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகியவை மட்டும் உயர்வுடன் இருக்கும் நிலையில் மற்ற அனைத்து 27 நிறுவனங்களும் சரிவை எதிர்கொண்டு உள்ளது. நிஃப்டி சந்தையில் மீடியா குறியீடு 4.29 சதவீதமும், கஸ்யூமர் டியூரபிள், ரியாலிட்டி, மெட்டல், ஹெல்த்கேர் குறியீடுகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Stock Market Investors lose Rs 6.27 lakh crore MCAP after RBI announcement

Stock Market Investors lose Rs 6.27 lakh crore MCAP after RBI announcement ஓரே நாளில் ரூ.6.27 கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

Story first published: Wednesday, May 4, 2022, 18:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.