இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வர முயன்றதாக ஈழத்தமிழர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை மன்னார் பேசாலைப் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு செல்ல முற்பட்டதாக 14 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் பேசாலை கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் போலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM