வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: வழக்கு ஒன்றில் வாதாட கோல்கட்ட உயர்நீதிமன்றம் வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்த கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
மேற்குவங்கத்தில் மெட்ரோ டெய்ரியின் பங்குகள் குறித்த வழக்கு ஒன்றில் ஆஜராக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் கோல்கட்டா உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். இதையறிந்த காங்.,வழக்கறிஞர்கள் சிலர் சிதம்பரம் காரை வழிமறித்து, திரும்பி போ சிதம்பரமே என கோஷமிட்டனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.
இது குறித்து மேற்குவங்க காங்., வழக்கறிஞர் கூறியது, “கெவென்டர் என்ற நிறுவனம் மெட்ரோ டெய்ரியின் பங்குகளை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க காங்., தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அந்நிறுவனத்திற்கு ஆதரவாக ப.சிதம்பரம் ஆஜராவது ஏற்புடையதல்ல. காங்கிரஸ் கட்சியின் உணர்வுடன் சிதம்பரம் விளையாடுகிறார் என்றார்.
Advertisement