தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக சரிவு.. இனியும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கம் விலையானது சர்பிரைஸ் கொடுக்கு விதமாக தொடர்ந்து 4வது நாளாக சரிவில் காணப்படுகின்றது. அட்சய திருதியை நாளிலும் விலை குறைந்திருந்த நிலையில் மக்கள் வாங்குவதற்கு ஏதுவாக இருந்தது.

சொல்லப்போனால் தங்கம் விலையானது 2 மாத சரிவில் காணப்பட்டது. இதுவும் தேவையினை ஊக்குவித்துள்ளது எனலாம்.

தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க!

இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, இரண்டு மாத சரிவு விலையான 50,755 ரூபாயினையும் எட்டியுள்ளது. அதேசமயம் வெள்ளி விலையானது கிலோவுக்கு 0.3% அதிகரித்து, 63,115 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

 தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

தங்கம் விலையானது வலுவான டாலர் மதிப்பு மற்றும் பத்திர சந்தை ஏற்றம் உள்ளிட்ட காரணிகளுக்கு மத்தியில் சரிவில் காணப்படுகின்றது. தங்கம் விலையானது 10 கிராமுக்கு கடந்த மார்ச் மாதத்தில் 55,600 ரூபாய் என்ற லெவலை எட்டியது. தற்போது 50,500 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது உச்சத்தில் இருந்து 5000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இது வாடிக்கையாளார்களை குறைந்த விலையில் வாங்க தூண்டலாம்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

ஆல் இந்தியா ஜெம் அன்ட் ஜீவல்லரி கவுன்சிலின் துணைத் தலைவர் ஷியாம் மேக்ரா பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், அட்சய திருதியை முன்னிட்டு நாடு முழுவதும் தங்கத்தின் தேவையானது மீண்டு வந்துள்ளது.

வரவிருக்கும் திருமண பருவத்தில் தங்கத்தின் தேவையானது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வட்டி விகிதம் என்னவாகும்?
 

வட்டி விகிதம் என்னவாகும்?

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் 11.30 Pm- க்கு நடக்கவிருக்கும் நிலையில், அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த சந்திப்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

 சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

வரவிருக்கும் முக்கிய அறிவிப்புக்கு மத்தியில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் ஆனது 1850 – 1838 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1882 – 1895 டாலர்களாகவு விபி கமாடிட்டி மதிப்பிட்டுள்ளது. இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 62,650 – 62,215 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 63,830 – 64,210 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

அட்சய திருதியை மத்தியில் தங்கம் விற்பனையானது 10% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் திருமண பருவம், விடுமுறை காலம் என்பதும் தேவையினை ஊக்குவிக்கலாம். இது மேற்கோண்டு விலையினை ஊக்குவிக்கலாம். இதற்கிடையில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையும் இதுவரையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 7.18 டாலர்கள் குறைந்து, 1863. 49 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது தற்போதைக்கு பெரியளவில் மாற்றம் காணவில்லை.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 0.41% குறைந்து அவுன்ஸூக்கு 22.540 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் விலையானது சற்று குறையலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 171 ரூபாய் குறைந்து, 50,635 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று கீழாகவே , குறைந்தபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 224 ரூபாய் குறைந்து, 62,258 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்த விலையையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது இந்திய சந்தையில் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 4810 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து, 38,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, 5232 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 41,856 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 220 ரூபாய் குறைந்து, 52,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 67 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 677 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 67,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வெளியாகவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தின் முடிவிவினை பொறுத்து வாங்கலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on May 4th, 2022: gold price continuously fall in 4th day: is it a right time buy?

gold price on May 4th, 2022: gold price continuously fall in 4th day: is it a right time buy?/தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக சரிவு.. இனியும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Story first published: Wednesday, May 4, 2022, 12:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.