திடீரென அறிவிப்பு.. வட்டி விகிதம் அதிகரிக்க போகிறதா.. என்ன சொல்ல போகிறார் சக்தி காந்த தாஸ்!

இந்திய பொருளாதாரம் கொரோனாவின் காரணமாக வீழ்ச்சி கண்ட நிலையில் இதில் இருந்து மீள இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்ற பரபர அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இது வெளியான சில தினங்களுக்கு பின்னர், இன்று மதியம் 2 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கவிருக்கிறார் சக்தி காந்த தாஸ்.

இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ரிசர்வ் வங்கி கவர்னர் திடீர் அறிவிப்பு.. 2 மணிக்கு முக்கிய அறிக்கை வெளியீடு..!

 வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

ஒன்று அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை நிச்சயம் அதிகரிக்கலாம் என்ற நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா உக்ரைன் பிரச்சனை காரணமாக நாட்டில் பணவீக்கம் மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது.

கடனில் தாக்கம் இருக்கலாம்

கடனில் தாக்கம் இருக்கலாம்

இது ரிசர்வ் வங்கியின் இலக்கினை தாண்டியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக அப்படி வட்டி விகிதம் அதிகரித்தால், கடன் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கும்போது., அது கடனுக்கான வட்டி விகிதங்களையும் அதிகரிக்க தூண்டும்.

வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம்
 

வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம்

குறிப்பாக வீட்டி கடன், வாகனக் கடன், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் என அனைத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். கொரோனாவில் இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ள நிறுவனங்கள், வட்டி விகிதம் அதிகரித்தால் மீண்டும் அதிக வட்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம். இது நிறுவனங்களின் வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

கவனிக்க வேண்டிய விஷயம்

கவனிக்க வேண்டிய விஷயம்

அதே சமயம் இந்திய பொருளாதாரம் கொரோனாவின் காரணமாக வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், மீள இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்ற பரபர அறிக்கையையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதுவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

பெரும் தாக்கம் இருக்கலாம்

பெரும் தாக்கம் இருக்கலாம்

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க மத்திய வங்கியானது ஏற்கனவே ஒரு முறை வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், இந்த முறையும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் இந்த முறையும் வட்டி அதிகரிக்கும் பட்சத்தில் அது இந்திய நிதி சந்தையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தியா மத்திய வங்கியும் வட்டியை அதிகரிக்க திட்டமிட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI gur shaktikanta das to address the media at 2pm: RBI likely to hike rates

RBI gur shaktikanta das to address the media at 2pm: RBI likely to hike rates/திடீரென அறிவிப்பு.. வட்டி விகிதம் அதிகரிக்க போகிறதா.. என்ன சொல்ல போகிறார் சக்தி காந்த தாஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.