புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 3,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
5 நாட்களுக்கு பிறகு நேற்று பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ்(2,568) குறைந்திருந்த நிலையில் இன்று பாதிப்பு உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 1,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியானாவில் 505, உத்தரபிரேதசத்தில் 331, கேரளாவில் 296, மகாராஷ்டிராவில் 182, கர்நாடகாவில் 107 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 88 ஆயிரத்து 118 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பால் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் 29 மரணங்கள் சேர்க்கப்பட்டது. இதைத்தவிர மகாராஷ்டிரா, டெல்லியில் நேற்று தலா ஒருவர் மேலும் 31 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,23,920 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2,802 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 44 ஆயிரத்து 689 ஆக உயர்ந்தது.
தற்போது 19,509 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று முன்தினத்தை விட 372 அதிகமாகும்.
நாடு முழுவதும் இதுவரை 189 கோடியே 48 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,79,208 டோஸ்கள் அடங்கும்.