கொபென்ஹஜென்,
இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று முன் தினம் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து பயணத்தின் 2-வது நாளான நேற்று பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். அங்கு அவர் டென்மார்க் பிரதமர் பிரதமர் மிட்டீ ஃபெடிக்செனை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், பயணத்தின் 3-வது நாளான இன்று பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். முன்னதாக டென்மார்க்கில் இந்திய பிரதமர் மோடி ஐஸ்லாந்து பிரதமர் கத்தரீன் ஜக்கோப்ஸ்டோட்ரியை சந்தித்தார்.
இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் ஐஸ்லாந்து பிரதமர் கத்தரீன் ஜக்கோப்ஸ்டோட்ரி பேசுகையில், சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு, புவியின் உள்வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரித்தல், மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியா – ஐஸ்லாந்து பல்வேறு வாய்ப்புகளை கொண்டுள்ளது. இந்திய பிரதமர் மோடியும் நானும் கலாச்சாரம், பாலின சமத்துவம் குறித்து ஆலோசித்தோம்.
இந்தியாவும் ஐஸ்லாந்தும் வெவ்வேறு நாடுகள். இந்தியாவே ஒரு துணைக்கண்டம். எங்கள் நாடு (ஐஸ்லாந்து) இயற்கையை பாதிக்காத வகையில் தனித்தன்மை பெற்றுள்ளது. பிரதமர் மோடியும் நானும் யோகா குறித்தும் பேசினோம். யோகா ஐஸ்லாந்தில் மிகவும் பிரபலம். நிறைய மக்கள் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார்.