அரசியல் கட்சி தொடங்குவார் எனத் தகவல் வெளியான நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மாணவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணையும் திட்டம் இல்லை என முடிவானதை தொடர்ந்து, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் பயணத்தை தனது சொந்த மாநிலமான பீகாரிலிருந்து தொடங்க உள்ளதாக நேற்று முன்தினம் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதில், “உண்மையான முதலாளிகளான” மக்களிடம், தான் செல்லப்போவதாக சூசகமாக குறிப்பிட்டிருந்தார் அவர்.
பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் அல்லது மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கி தனது புதிய அரசியல் பயணத்திற்கு தொடக்கப்பள்ளி வைப்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் அளவுக்கு அவரது கருத்து கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க… “ஜன் ஸ்வராஜ்”.. பீகாரில் தொடங்குகிறதா பிரசாந்த் கிஷோரின் அரசியல் பயணம்? – ஓர் அலசல்
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர், நாளை தனது புதிய அரசியல் கட்சி குறித்த விவரங்களை தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் அவர் சமூக ஆர்வலர்கள், ஆர்டிஐ ஆர்வலர்கள், மற்றும் பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து அவர் பேசியுள்ளார். மேலும், அவர் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளையும் அறியவிருப்பதாகக் கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM