கோத்தகிரி மலைப்பாதையில் அரசு பேருந்து வந்தபோது ஒற்றை காட்டு யானை சாலையில் நீண்ட நேரம் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள முள்ளூர் பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடிவந்த ஒற்றை காட்டுயானை, சாலையில் நீண்ட நேரமாக சுற்றி வந்தது. இதனால் உதகை மேட்டுப்பாளையம் சாலை சீசன் முடியும் வரை ஒரு வழிப்பாதை என்பதால் உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
இதையடுத்து வழக்கத்திற்கு மாறாக வாகனங்கள் அதிகமாக வந்ததாலும், லைட் வெளிச்சம், அதிகமாக இருந்ததாலும் ஒற்றையானை போகும் இடம் தெரியாமல் திணறியது. இதைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் சாலையில் உலாவந்த காட்டு யானை பின்னர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM