பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பாலா இயக்கும் ’சூர்யா 41’ புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் 33 நாட்கள் நடைபெற்றன. இடைவிடாமல் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ஒரு மாத காலம் ஓய்வெடுகிறார். அதன்பின், ஜூன் மாதத்தில் கோவாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இதற்கிடையில், இன்று காலை முதலே பாலா படத்தில் இருந்து சூர்யா வெளியேறினார் என செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. பாலா படத்திலிருந்து சூர்யா விலகினார் என்று பரவும் தகவலை சூர்யாவின் 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் மறுத்துள்ளார். அத்துடன் திட்டமிட்டபடி அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்தார். ‘சூர்யா 41’ படத்தினை முடித்துவிட்டு வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, சிறுத்தை சிவா இயக்கும் புதிய படங்களில் இணையவிருக்கிறார் சூர்யா.