பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.. பந்தன் வங்கி சூப்பர் அறிவிப்பு!

தனியார் வங்கி நிறுவனமான பந்தன் வங்கி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை, மே 4-ம் தேதி முதல் 0.50 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.

பந்தன் வங்கியின் ஒருவருடம் முதல் இரண்டு வருடம் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி வகிதம் 5.25 சதவீதத்தில் 0.50 சதவீதம் உயர்த்தி 5.75 சதவீதமாக அறிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி கவர்னர் திடீர் அறிவிப்பு.. 2 மணிக்கு முக்கிய அறிக்கை வெளியீடு..!

ரெகுலர் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்

ரெகுலர் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்

மே 4-ம் தேதி முதல் பந்தன் வங்கியின் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 3 சதவீதம் வட்டி விகித லாபம் வழங்கப்படும். 15 முதல் 30 நாட்களுக்கு 3 சதவீதம் வட்டி விகித லாபம் கிடைக்கும். 31 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை டெபாசிட் செய்தால் 3.50 சதவீதம் லாபம் வழங்கப்படும்.6 மாதம் முதல் 1 வருடம் வரை டெபாசிட் செய்பவர்களுக்கு 4.50 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும்.

1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் டெபாசிட் செய்யும் தொகைக்கு 5.75 சதவீத லாபம் கிடைக்கும். 2வது ஆண்டு முதல் 5 வது ஆண்டு வரை 6.25 சதவீத லாபம் கிடைக்கும். 5வது 10வது ஆண்டு வரை 5.60 சதவீதம் லாபம் வழங்கப்படும்.

 

பட்டியல்
 

பட்டியல்

Maturity Bucket Interest Rates for Non-Senior Citizens
7 days to 14 days 3.00%
15 days to 30 days 3.00%
31 days to Less than 2 months 3.50%
2 months to less than 3 months 3.50%
3 months to less than 6 months 3.50%
6 months to less than 1 year 4.50%
1 year to 18 months 5.75%
Above 18 months to less than 2 years 5.75%
2 years to less than 3 years 6.25%
3 years to less than 5 years 6.25%
5 years to up to 10 years 5.60%

மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்

பந்தன் வங்கியின் மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களில், மே 4-ம் தேதி முதல் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் டெபாசிட் செய்தால் 3.75 சதவீதம் வட்டி விகித லாபம் வழங்கப்படும். 15 முதல் 30 நாட்களுக்கு 3.75 சதவீதம் வட்டி விகித லாபம் கிடைக்கும். 31 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை டெபாசிட் செய்தால் 4.25 சதவீதம் லாபம் வழங்கப்படும்.6 மாதம் முதல் 1 வருடம் வரை டெபாசிட் செய்பவர்களுக்கு 5.25 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும்.

1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் டெபாசிட் செய்யும் தொகைக்கு 7 சதவீத லாபம் கிடைக்கும். 2வது ஆண்டு முதல் 5 வது ஆண்டு வரை 7 சதவீத லாபம் கிடைக்கும். 5வது 10வது ஆண்டு வரை 6.35 சதவீதம் லாபம் வழங்கப்படும்.

 

பட்டியல்

பட்டியல்

Maturity Bucket Interest Rates for Senior Citizens
7 days to 14 days 3.75%
15 days to 30 days 3.75%
31 days to Less than 2 months 4.25%
2 months to less than 3 months 4.25%
3 months to less than 6 months 4.25%
6 months to less than 1 year 5.25%
1 year to 18 months 6.50%
Above 18 months to less than 2 years 6.50%
2 years to less than 3 years 7.00%
3 years to less than 5 years 7.00%
5 years to up to 10 years 6.35%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bandhan Bank Hikes Interest Rates On Fixed Deposits By 50 Bps (W.e.f. 4th May 2022)

Bandhan Bank Hikes Interest Rates On Fixed Deposits By 50 Bps (W.e.f. 4th May 2022) | பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.. பந்தன் வங்கி சூப்பர் அறிவிப்பு!

Story first published: Wednesday, May 4, 2022, 18:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.