பிரித்தானியாவில் 120 விமான சேவைகள் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்பு!


பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்-ஸின் அனைத்து விமான சேவைகளையும் இன்று நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

புதன்கிழமையான இன்று பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான விமான சேவையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது 120 குறுகிய தூர விமானங்களை ரத்து செய்துள்ளது.

இதில் எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவிற்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 28 உள்ளுர் குறுகிய தூர விமான விமானங்களையும், ஜெனீவா மற்றும் லியோனுக்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 94 வெளியூர் குறுகிய தூர விமான விமானங்களையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இன்று ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான சேவை ரத்தானது முன்கூட்டியே திட்டமிடபட்டது என்றும், இந்த ரத்து நடவடிக்கை குறித்து தங்களது பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தகவல் அனுப்பபட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது, மேலும் குறிபிட்ட விமானச் சேவையை முன்னறே அட்டவணையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

கொரொனா காலத்தில் எற்பட்ட நெருக்கடி மற்றும் அதனால் தற்போது எற்பட்டுள்ள பணியாளர்கள் பற்றாக்குறை ஆகிய நெருக்கடியை சமாளிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது Oneworld partner Finnair-ல் இருந்து விமானம் மற்றும் பணியாளர்களை கொண்டு வந்து கோடை காலத்திற்கான விமான சேவை அட்டவணையை நிலைப்படுத்த முயற்சிப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, ஹீத்ரோவின் தலைமை நிர்வாகி John Holland-Kaye அளித்த பேட்டியில், “ஒரு விமான நிறுவனம் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமங்களை சந்திக்கப் போகிறது என்று தெரிந்தால், அவர்கள் முன்கூட்டியே மக்களிடம் சொல்லி இருப்பது நல்லதே, இதனால் மக்கள் அந்த நாளில் அவர்களால் பறக்க முடியாது என்பதைக் கண்டுபிடிப்பார்கள் மற்றும் அவர்களது பயணத்திற்கான மாற்று எற்பாட்டை செய்வார்கள் என தெரிவிததுள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: தேர்தல் முடிவை மாற்றியமைக்கும் கருக்கலைப்பு ஆதரவு: அமெரிக்க உச்சநீதிமன்ற முன்வரைவு சட்டத்தால் பரபரப்பு!

இதைப்போல், பிரித்தானியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான easyJet தனது தினசரி விமான சேவைக்கான 70 விமானங்களை ரத்து செய்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.