சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சபட்சமான அக்னி நடத்திரம் வெயில் இன்று தொடங்குகிறது. 25 நாட்கள் தொடரும் இந்த வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. குறிப்பிக வேலூர் மாவட்டம் உள்பட சில இடங்களில் வெயில் 110 டிகிரிரை கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் இந்த கத்திரி வெயிலின் உச்சபட்ச வெப்பமானது அக்னி நட்சத்திரம் காலக்கட்டங்களில் வெளிப்படும்.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் வெயில் காலம் இன்று (மே 4-ந்தேதி) தொடங்குகிறது. இந்ம கொடும் வெயிலான மே 28-ந் தேதி முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், அனல்காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே நடுமாடுவதை தவிர்க்கும்படி மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அக்னி நட்சத்திரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ,வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், ”மே மாதத்தில் இயல்பை விட சற்று குறைவாகவே வெப்ப நிலை நிலவும்.அதே சமயம் வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் வேகம் பொருத்து வெப்பநிலை மாறுபடும். தமிழகத்தில் காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சூரியக் கதிர்கள் நேரடியாக தாக்கக் கூடும்.இந்த வேளையில் குழந்தைகள், வயதானவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்”,என்று கூறினார்.