நாம் எலான் மஸ்கின் வாழ்வில் இருந்து கற்று கொள்ள வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள் பின்வருமாறு..
1. கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை . அதிர்ஷ்டமும் கடவுளும் துணை செய்கிறார்களோ இல்லையோ வள்ளுவர் வாக்கின்படி நம் கடின உழைப்பும் , முயற்சியும் நம் கனவுகளை மெய்ப்பட வைக்கும்
2. வாழ்க்கையில் கனவு காணுதலும் அந்த கனவை மெய்ப்பிக்கும் துடிப்பும் விடா முயற்சியும் ரொம்பவே முக்கியம். முயன்றால் மெய்யாக்கப்பட முடியாத கனவுகளே இல்லை.
3. உங்கள் கனவுகளை மெய்ப்படுத்த எல்லாரும் பயன்படுத்தும் ஒரே ஒரு அரதப்பழசான போட்டிகள் நிறைந்த பழைய வழியை மட்டும் நம்பி இருக்காதீர்கள் . மாத்தி யோசியுங்கள், வெற்றி உங்கள் வசமாகும்
4. உங்கள் கனவுகளை நோக்கிய உங்கள் நெடும் பயணத்தில் பொறுமை காப்பது மிகவும் அவசியம். வெற்றி கோட்டை தொடும் வரையில் நீங்கள் சந்திக்க நேரும் இடையூறுகள், தோல்விகள் உங்களை தடம் பிறழ செய்ய செய்யாமல் நீங்கள் பொறுமை காப்பது மிகவும் அவசியம். அத்தகைய பொறுமையும் அசுரத்தனமான கடின உழைப்பும் நான் கண்டிப்பாக சாதிப்பேன் என்ற அளவு கடந்த தன்னம்பிக்கையும் மட்டுமே உலகமே எதிர்பார்த்தபடி நஷ்டத்தில் மூழ்கி போன கப்பலாக மாறி போக இருந்த டெஸ்லா நிறுவனத்தை மீண்டும் கோடிகள் கொழிக்கும் லாபகரமான நிறுவனமாக மாற்ற எலான் மஸ்க்குக்கு உதவியது
5.எத்தனை முறை தோல்விகள் வந்தாலும் உடனடியாக பீனிக்ஸ் பறவை போல எழுந்து நிற்க வேண்டியது ஒரு சாதனையாளனுக்கு மிக முக்கியம்
6. உங்கள் கனவுகளை நனவாக்கும் நீண்ட நெடும் சாதனை பயணத்தில் உங்களுக்கு கிடைக்கும் சிறு சிறு உதவிகளையும் , யோசனைகளையும் கூட ஒதுக்கி தள்ளாமல் ஏற்று கொள்ளுவது அவசியம். நல்ல யோசனைகளை கேட்க உங்கள் செவிகளை எப்போதும் திறந்து வைத்தல் மிக அவசியம்.
7. உங்கள் வியாபாரத்திற்கு என்னதான் வலுவான PLAN A இருந்தாலும், PLAN B ஒன்றையும் வைத்து இருத்தல் மிக அவசியம்
8. உங்கள் கனவுகளை மெய்ப்படுத்தும் உங்கள் சாதனை பயணத்தில் வழி நெடுக சிறிதும் பெரிதுமாக பல தியாகங்களை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். கோடீஸ்வரன் ஆனபிறகும் தன் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் வாரத்துக்கு 100 முதல் 120 மணி நேரம் வேலையிலே பழியாக கிடப்பவர் எலான் மஸ்க் . அதுவே அவரை இன்று குபேரனின் பங்காளியாக ஆக்கி இருக்கிறது.
9. அடுத்தவர்களின் குறிக்கோள்களை விட ஒருபடி அதிகமாகவே உங்கள் குறிக்கோள்கள் இருக்கட்டும் . அதுவே உங்களை சாதனையாளராக மாற்றும். அடுத்தவர்கள் திருப்தியடையும் சாதாரண இலக்குகளை அடைவதில் ஒருபோதும் திருப்தி கொள்ளாதீர்கள்.
10. புதிய விஷயங்களை தொடர்ந்து கற்று கொண்டு வருதல் சவாலான உங்கள் எதிர்கால பயணத்தை எளிதாக்கும். அதுவும் தினமும் முன்னேறி செல்லும் டெக்னாலஜி நீக்கமற நிறைந்த உலகில் தொடர்ந்து கற்றல் (Continuous Learning ) ரொம்பவே முக்கியம். உங்களை சுற்றி நடக்கும் உலக நிகழ்வுகளை தொடர்ந்து அவதானித்தல் மிக அவசியம். அதுவே உங்கள் எதிர்கால பயணத்தில் மிகப்பெரும் சாதனைக் கோடுகளை எளிதில் கடக்க உதவும். இன்றைய சாதனை கொண்டாட்டங்களுக்கு நடுவில் எதிர்காலத்துக்கான திட்டமிடல் மிக முக்கியம் .
மேற்கண்ட விஷயங்களை பின்பற்றுவதால் மட்டுமே நாம் அனைவரும் தோல்விகள் எதுவும் இன்றி சீக்கிரமே எலான் மஸ்க் போல ஆகிவிடுவோம் என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் இவ்வளவு கடின உழைப்பும் அறிவும் கொண்ட மிக பெரும் சாதனையாளராக பணக்காரராக உருவெடுத்து இருக்கும் எலான் மஸ்கின் இந்த நீண்ட நெடும் சாதனை பயணம் மற்ற சாதனையாளர்கள் போலவே கடும் சோதனைகளை சந்தித்த பின்னே இன்று வெற்றி கோட்டை தொட்டு இருக்கிறது. இதற்கு காரணம் முழுக்க முழுக்க அவருடையய அதீத தன்னம்பிக்கையும், அவரின் தொடர்ந்த கற்றலும், சமூக அவதானிப்பும், மிக கடினமான அசுரத்தனமான உழைப்பும் மட்டுமே .
அதனால் மக்களே சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் டீவி ரியாலிட்டி ஷோக்கள் பார்ப்பதிலும், மற்ற பொழுதுபோக்குகளிலும் நேர விரயம் செய்வதையும் விட்டு உபயோகமாக உங்கள் நேரத்தை செலவிட ஆரம்பியுங்கள் . எலான் மாஸ்க் சொல்வதில் எனக்கு மிகவும் பிடித்த பின்வரும் அறிவுரையை சொல்லி இந்த கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன் ” நாம் விழித்து இருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் உருப்படியான, எதிர்காலத்துக்கு பயனுள்ள செயல் ஒன்றை நாம் செய்ய வேண்டும். செய்ய உருப்படியான வேலை ஒன்றுமில்லாவிட்டால் குறைந்தது ஒரு புத்தகத்தையாவது படிக்க வேண்டும் “.
வருங்கால எலான் மஸ்குகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.