கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்து உள்ளார்.
தீவு நாடான சமோவாவில், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த
முழு ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் ஓரளவு குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இதற்கிடையே, சமோவாவில் கடந்த 24 மணி நேரத்தில், 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை, நிலை 2 ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது என, அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை – தென் கொரியா குற்றச்சாட்டு!
இது குறித்து பேசிய பிரதமர் ஃபியாம் நவோமி மாதாஃபா, கொரோனாவைக் கட்டுப்படுத்த நிலை 2 ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 17 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், இந்த மாதத்தில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சர்வதேச பயணிகளுக்கு, தங்கள் நாட்டிற்கு வர அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சமோவா
நாட்டில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 92.6 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளனர். அதே சமயம் மொத்தம் 70,439 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.