ராஜபாளையம்: சொத்து பிரிப்பதில் தகராறு… சகோதரியை வெட்டிக்கொன்ற தம்பி!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்(50). இவருடைய, உடன் பிறந்த மூத்த சகோதரி பாஞ்சாலி(58). இவர், அழகாபுரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அக்கா, தம்பி இருவருக்கும் சொந்தமான பூர்வீக வீடு ஒன்று செவல்பட்டியில் உள்ளது. இந்த சொத்தை சரிசமமாக பிரிப்பதில் பாஞ்சாலிக்கும், ரமேஷுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் பூர்வீக வீட்டின் முன் வைத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலை

வாக்குவாதம் முற்றிய நிலையில் ரமேஷ், தனது சகோதரி பாஞ்சாலியை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. கழுத்துப் பகுதியில் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பாஞ்சாலி ரத்த வெள்ளத்தில், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த வடக்கு காவல் நிலைய போலீஸார், பாஞ்சாலியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் சரணடைந்த ரமேஷை கைது செய்த போலீஸார், சம்பவம் குறித்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.