ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று மதியம் 2 மணிக்கு உலகளாவிய பணவீக்க கவலைகள் இந்தியாவின் மீட்சிக்கு சவாலாக இருப்பது குறித்து மிகவும் முக்கியமான அறிக்கையை வெளியிட உள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் தனது உரையில் என்ன உரையாற்றுவார் என்பது தெளிவாகவும் முழுமையாகவும் தெரியவில்லை. ஆனால் கட்டாயம் பணவீக்கம் மூலம் இந்தியப் பொருளாதாரம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்புகள் தொடர்பாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் இன்று தனது இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தைத் துவங்க உள்ளது. அமெரிக்காவின் முடிவுகளுக்கு முன்னதாக ஆளுநரின் உரை வருவதால் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏனெனில் இந்த அறிக்கை கட்டாயம் பணவீக்கம் மூலம் இந்தியாவில் பதிவாகியுள்ள மந்த நிலை குறித்து இருக்கும் காரணத்தால் அனைத்து தரப்பினருக்கும் இது முக்கியமானதாக விளங்குகிறது.
சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ‘கோவோவாக்ஸ்’ விலை குறைந்தது.. புதிய விலை என்ன?
RBI Governor Shaktikanta Das to make Important statement at 2 pm
RBI Governor Shaktikanta Das to make Important statement at 2 pm ரிசர்வ் வங்கி கவர்னர் திடீர் அறிவிப்பு.. 2 மணிக்கு முக்கிய அறிக்கை வெளியீடு..!