இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மதுரவாயலில் உள்ள ரெஜிஸ்டர் அலுவலகத்திற்கு சென்று இருந்தார். அவரை அடையாளம் கொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மாநகரம் திரைப்படம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். இந்த நிலையில் தற்போது ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய செய்தி: ஓடிடி-யில் எப்போ வருகிறது `பீஸ்ட்’? ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த வாவ் அப்டேட்!
இந்த நிலையில் இன்று காலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சொந்த விஷயம் காரணமாக மதுரவாயலில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு லோகேஷ் கனகராஜ் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.