இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் புதன்கிழமை மதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் உயர்த்தி 4.4 சதவீதமாக அறிவித்தார்.
ஆர்பிஐ கவர்னரின் இந்த அறிவிப்பை அடுத்து மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1000+ புள்ளிகள் வரையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 250+ புள்ளிகள் வரையிலும் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டது.
சென்செக்ஸ் & நிப்டி
ஆர்பிஐ கவர்னரின் அறிவிப்பிற்குப் பிறகு 2:30 மணியளவில் சென்செக்ஸ் 1.88 சதவீதம் என 1,116.66 புள்ளிகள் சரிந்து 55,859.87 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு 341 புள்ளிகள் சரிந்து 16,728 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
குறியீடுகள்
சி.பி.எஸ்.ஈ துறையை தவிர வங்கி, எண்ணெய், ஐடி, கட்டுமானம், ஆற்றல் என எல்லா துறை சார்ந்த பங்குகளும் இந்த அறிவிப்பால் சரிந்துள்ளது.
பங்குச்சந்தை ஏன் சரிவு?
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயரும். வங்கிகளுக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். எனவே நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை விராவுக்கும் பணிகள் தாமதமாகும். சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகளை விட அதிக லாபம் தரும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சேமிப்பது அதிகரிக்கும்.
சர்வதேச சந்தை
இந்திய பங்குச்சந்தை மட்டுமல்லாமல் ஜெர்மனி பங்குச்சந்தை குறியீடு DAX 0.1 சதவீதமும், ஹாங் காங்கி பங்குச்சந்தை 1.1 சதவீதமும் ஆர்பிஐ அறிவிப்பால் சரிந்துள்ளன.
Sensex 1000+ pts and Nifty 330+ pts down as RBI increases repo rate
Sensex 1000+ pts and Nifty 330+ pts down as RBI increases repo rate | ரெப்போ வட்டி விகிதம் உயர்வு.. சென்செக்ஸ் 1000, நிப்டி 250 புள்ளிகள் வரை சரிவு!