ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் திடீர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியாக அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கப்பட்டது போலவே வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரின் கடனுக்கான வட்டி விகிதம் உயரும். இதன் மூலம் வீட்டுக்கடன், வாகன கடன், தங்க கடன், தனிநபர் கடன் உட்பட அனைத்துக் கடன்களுக்கான ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும். இதேபோல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயரும்.
ரிசர்வ் வங்கி கவர்னர் திடீர் அறிவிப்பு.. 2 மணிக்கு முக்கிய அறிக்கை வெளியீடு..!
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சர்வதேச நெருக்கடி மற்றும் மந்த நிலையில் இந்திய பொருளாதாரம் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையிலும், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் 0.50 சதவீத வட்டியை உயர்த்தும் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியுள்ளது.
யாருக்கெல்லாம் பாதிப்பு..!
இந்தச் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி விகித உயர்வு பொருளாதார வல்லுனர்களால் பாராட்டப்பட்டாலும், சாமானிய மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஏன் ரெப்போ விகித உயர்வால் என்ன நடக்கும்.. யாருக்கெல்லாம் பாதிப்பு.. யாருக்கெல்லாம் லாபம்..
ரெப்போ விகிதம்
ஆர்பிஐ இன்று வணிக வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்யும் ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி 4.40% ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் வங்கியில் கடன் வாங்கியுள்ள அனைத்துத் தரப்பு மக்களின் வட்டி உயர்ந்து ஒவ்வொரு மாதமும் செலுத்தும் ஈஎம்ஐ தொகை உயரும்.
ஈஎம்ஐ தொகை
எற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்களுக்கு இந்த வட்டி உயர்வு அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. ஆர்பிஐ வங்கியின் இந்த வட்டி விகிதத்தைக் கட்டாயம் அனைத்து வங்கிகளும் உடனடியாக அமல் செய்யும் காரணத்தால் மே மாதம் ஈஎம்ஐ தொகை கூட உயரும்.
வைப்பு நிதி
இதேபோல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அதிகரிக்க உள்ளது. வைப்பு நிதியை முக்கியமாகக் கொண்டுள்ள பல கோடி மூத்த குடிமக்களுக்கு இந்த வட்டி விகிதம் தொடர்ந்து சரிந்து வந்தது மூலம் வருமானத்தை இழந்த நிலையில் 0.40 சதவீத உயர்வு மூலம் கூடுதலான வருமானத்தைப் பெற உள்ளனர்.
சிஆர்ஆர் விகிதம்
மேலும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான சிஆர்ஆர் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.50% அதிகரித்துள்ளது. சிஆர்ஆர் விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதன் மூலம் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அனைத்து வங்கிகளும் ஆர்பிஐ-யிடம் டெப்பாசிட் வைக்கும் தொகையின் அளவு அதிகரிக்கும்.
87000 கோடி ரூபாய்
சிஆர்ஆர் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 4.5 சதவீதமாக ஆர்பிஐ அறிவித்துள்ளது மூலம் சந்தையில் பணப்புழக்கத்தில் இருக்கும் 87000 கோடி ரூபாய் ஆர்பிஐ கைப்பற்ற உள்ளது.
பணப்புழக்கம்
வட்டி விகிதம் உயர்வால் பணப்புழக்கத்தில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என ஆர்பிஐ கவர்னர் உறுதி அளித்துள்ளார், வங்கிகளுக்கு வட்டி உயர்வுக்குப் பின்பும் அதிகப்படியான உபரி நிதி மற்றும் பணப்புழக்கம் இருக்கும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம்
இதன் மூலம் வங்கிகள் கடன் அளிக்கும் அளவுகள் அல்லது எண்ணிக்கை கணிசமாகக் குறையும். மேலும் ரெப்போ விகிதம், சிஆர்ஆர் விகித உயர்வின் மூலம் பணவீக்கம் குறையும் என ஆர்பிஐ நம்புகிறது.
Repo rate, CRR rate increased by RBI; How its impacts common people
Repo rate, CRR rate increased by RBI; How its impacts common people on loan and deposit rates ரெப்போ விகிதம், சிஆர்ஆர் விகிதம் உயர்வு.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..!