சென்னை: வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புலன் விசரணையில் நீதிமன்றம் தலையிடாது, துன்புறுத்தல் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது என நீதிபதி ஜெகதீஸ் கூறியுள்ளார். ஒருவரை விசாரணைக்கு அழைத்தல் உச்சநீதிமன்ற வழிகாட்டு விதிகளை கண்டிப்பாக போலீஸ் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.