இந்திய கிரிக்கெட் அணி வீரரான
விராட் கோலி
களத்தில் விளையாடும்போதும், பயிற்சி செய்யும் போதும், அணிந்திருந்த கருப்பு நிற மேலாடை இணையத்தில் வைரலானது. டீம் இந்தியாவின் ஃபாமுக்கு இது தான் காரணமா என்றும் இணையவாசியகள் சலசலத்து வந்தனர்.
ஆனால் விஷயம் அதுவல்ல. இதனுள் ஒரு டெக் கேட்ஜெட் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் இந்த ஆடையை பயன்படுத்துகின்றனர். உள்ளாடை போன்று தோற்றம் அளிக்கும் இந்த உடையில், ஒரு சிறிய சாதனம் பொருத்தப்பட்டிருக்கும்.
உலகளவில் உள்ள விளையாட்டு வீரர்கள் பலரும் இந்த உடையைப் பயன்படுத்துகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் சமயத்தில், இந்திய ஹாக்கி அணி வீரர்களும் இந்த ஆடையின் பலனை அனுபவித்தனர். இந்த உடையின் எடை, டென்னிஸ் பந்தின் எடையை விட குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அப்படியென்ன சிறப்பம்சங்கள் இந்த உடையில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதில் இருக்கும் அம்சங்கள் அனைத்தும் விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது. அவர்களது உடல் உழைப்பை சரியாகக் கணித்து, அந்த தரவுகளை பாதுகாப்பாக இந்த உடை சேமித்து வைக்கிறது.
கிரியேட்டர்கள் வாழ்வில் விளக்கேற்றிய இன்ஸ்டாகிராம்!
ஜிபிஎஸ் உடை
இந்த ஒரு தொழில்நுட்பமானது, விளையாட்டு வீரர்களை களத்திற்குச் செல்லும் முன் அவர்களை தயார் செய்துகொள்ளும் வேலைகளுக்கு உதவுகிறது. வீரர், வீரங்கனைகள் என இருபாலரும் இதனைப் பயன்படுத்தலாம். பின்பக்கம் இரண்டு தோள்பட்டைகளுக்கு இடையில் இருப்பது தான் இதன் முக்கியமாகப் பகுதி.
இதனுள், டென்னிஸ் பந்தை விட எடைக் குறைவான ஜிபிஎஸ் கருவி ஒன்று இருக்கும். இது தூரத்தை கணிக்க உதவுகிறது. இதுமட்டும் இல்லை. இன்னும் நிறைய அம்சங்கள் இதில் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் அக்செலெரோமீட்டர் சென்சார் வேகத்தை கணிக்க உதவுகிறது.
இன்னும் இரு படி மேலாக கைரோஸ்கோப், மேக்னெட்டோமீட்டர் ஆகிய சென்சார்கள் உடல் அசைவுகளை முப்பரிமாண வாக்கில், அதாவது 3டி முறையில் உள்வாங்கி, தரவுகளை சேமித்து வைக்கிறது. மிக முக்கியமானதாக இதில் இருக்கும் இதயத்துடிப்பை அளவிடும் கருவி, வீரர்களின் இதயத்துடிப்பை தொடர்ந்து கண்காணிக்கும். அதில் ஏதேனும் மாறுதல்கள் தென்பட்டால், உடனடியாக சமிக்ஞை மூலம் தெரிவிக்கும்.
AC Jacket: சிவாஜி பட ரஜினி மாதிரி ஏசி ஜாக்கெட் வேண்டுமா!
பிசிசிஐ ஒப்பந்தம்
இந்தியாவில் வைத்து நடைபெறும் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன், BCCI ஆனது லண்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்,
STATSports
என்ற நிறுவனத்துடன் இந்த தொழில்நுட்பத்தை வழங்கவும், தரவை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
STATSports நிறுவனமானது பார்சிலோனா, லிவர்பூல், US மகளிர் தேசிய கால்பந்து அணிக்கும் இதே தொழில்நுட்பங்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தொழில்நுட்பத்தை வழங்கவதோடு நின்றுவிடாமல், குறிப்பிட்ட விழுக்காட்டிற்கு மேல் உள்ள இதயத் துடிப்பு, உடல் பாகங்கள் இயங்கும் வேகம், வேகம் குறைதல் ஆகியவற்றை எண்களில் தொகுத்து வீரர்களுக்கு தரவுகளாக வழங்கும்.
*Photo Image Credit: STATSports.com